சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (28.05.2023) அனுராதபுரம் - ஸ்ரவஸ்திபுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக ராஜாங்கனை சத்தாரதன தேரர் மீது, பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் முன்வைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடு
இவ்வாறு கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (29.05.2023) முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
