பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸ்!பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட தகவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட, புதிய வகை ஒமிக்ரோன் (Omicron) கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில்,பிரித்தானியாவில் ஒமிக்ரோன் (Omicron) வைரஸால் மூன்றாவது நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், இங்கிலாந்தில் கடைகள் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களுக்கு முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய உத்தரவு அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமாக பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் நடைமுறையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடக்க நிலையில், புதிய வகை கொரோனாவை பற்றி நமக்கு அதிகம் தெரியாது எனவும்,விஞ்ஞானிகள் அடுத்தடுத்து அது பற்றி ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் மிக விரைவாக பரவி வரும் நிலையில், இரண்டு தடுப்பூசிகளை எடுத்து கொண்டவர்கள் இடையேயும் இந்த வைரசானது விரைவில் பரவக்கூடும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
