ஒமிக்ரோன் வகை திரிபு வேகமாக பரவாது - சந்திம ஜீவந்தர
ஒமிக்ரோன் வகை திரிபு இலங்கையிலும், பிற நாடுகளிலும் வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளரும் மருத்துவ நிபுணருமான சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒமிக்ரோன் வகை திரிபு இலங்கையிலும், பிற நாடுகளிலும் வேகமாகப் பரவாது.
ஒமிக்ரோன் குறித்து தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு பதிலளிக்கவில்லை என்றாலும், பூஸ்டர் தடுப்பூசியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த வைரஸ் மாறுபாடு பற்றி ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பான தரவுகளைப் படிக்க அதிக நேரம் தேவைப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
There was ?hope that Omicron might not spread as fast in Sri Lanka/Europe. We wouldn’t necessarily see the same rate of spread as in South Africa because high rates of Delta and vaccination would be in Omicron’s way.
— Chandima Jeewandara (@chandi2012) December 8, 2021
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 21 மணி நேரம் முன்

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
