இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர் : மேலதிக விபரங்கள் வெளியாகின
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் தொடர்பாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இன்றையதினம் ்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 24 ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து இலங்கை வந்து மாரவில பிரதேசத்தில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவருக்கே இவ்வாறு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் இருந்து வந்த 25 வயதுடைய பெண் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார். தொற்றாளர் தற்போது அவரின் வசிப்பிட பிரதேசத்தில் உள்ளார்.
யுவதி தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்றிருந்தார். குறித்த காலப்பகுதியில் அவர் தனியான அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளார்.
அவ்விடத்தில் இருந்து வைரஸ் வேறு நபர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என கூற முடியாது ஆனால் வாய்ப்புகள் மிக குறைவு. எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் பயண விபரங்கள் மற்றும் அவரிடம் பழகியவர்கள் தொடர்பில் எமக்கு தெரியாது. அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் இந்த வைரஸை கொண்டு வர வாய்ப்புள்ளது. அவ்வாறான நபர்களையும் மிக விரைவில் கண்டுபிடிக்ககூடியதாக இருக்கும் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
