கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸின் தாக்கம் அதிகரிப்பு

Death Batticaloa People Omicron
By Independent Writer Jan 27, 2022 09:09 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் எனச் சந்தேகிக்கப்படும் வைரஸ் நோயாயினால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த ஒரு வாரத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கோவிட் தடுப்பு செயலணி கூட்டம் இன்று (27) மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

திடீரென எமது நாடு உட்பட உலகம் பூராக ஒமிக்ரோன் வைரசின் தாக்கத்தினால் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த விதத்தில் மேற்கு மாகாணமான கொழும்பு, கம்பஹா தவிர்ந்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று 100 மேற்பட்ட நோயாளிகளும் 20க்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களும் இந்த நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தில் 40க்கு அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் ஒமிக்ரோன் என சந்தேகிக்கப்படும் வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 தினங்களில் 500 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்று 22 யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து இரண்டு யுவதிகள் உட்பட 6 பேர் கடந்த ஒருவாரத்தில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த முறை டெல்டா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வைத்துப் பராமரிப்பதற்குச் சிரமப்பட்டிருந்தோம். ஆனால் இந்த முறை வந்திருக்கின்ற ஒமிக்ரோன் வைரஸ்  மிக அதிகளவானவர்களை மிகக் குறுகிய காலத்தில் நோயினால் பாதிப்படையச் செய்து கொண்டிருக்கின்றது.

இந்த தாக்கம் ஏற்பட்டதையடுத்து எங்களுக்கு எதிர்காலத்தை நோக்கிய நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதுடன், இந்த நோய் தாக்கம் எம்மை திக்கு முக்காடவைத்துள்ளது. ஏன் என்றால் வைத்தியசாலைகளில் வைத்துப் பராமரிப்பதற்கான போதிய இடங்கள் இல்லை.

ஆகவே பொதுமக்கள் இந்த ஒரு அபாயத்தை உணர்ந்தவர்களாக ஒவ்வொரு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இன்று இலங்கையில் இருக்கின்ற இந்த பொருளாதார சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற இந்த நிலைமை கோவிட் தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த நிலைமையை மேலும் அதிகரிக்கின்ற விதமாக எமது நடவடிக்கைகளைச் செய்ய முடியாது.எனவே தேவையற்ற விதத்தில் கூட்டம் கூடுதலை நிறுத்த வேண்டும்.

பிறந்த நாள் வைபவங்கள் மற்றும் வேறு சமூக வைபவங்களுக்காக ஒன்று கூடுவதை நிச்சயமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதேவேளை ஒன்று கூடுவதற்குச் சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும்.

இது தொடர்பாக மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், பொலிஸ் நிலையங்கள், அனுமதி வழங்குதல் மற்றும் சட்ட நடவடிக்கை தொடர்பாகக் கலந்துரையாட உள்ளோம்.

எனவே மக்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவது என்பது மிக மிக முக்கியமானது.

சமூக இடைவெளி என்கின்ற ஒரு மீற்றர் இடைவெளி மற்றும் சுகாதாரம் பேண வேண்டும். இந்த வைரஸ்சை நோயை உலகத்திலிருந்து இல்லாமல் ஒழிப்பதற்குத் தான் இந்த தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

இந்த தடுப்பூசி மூலம் கடந்த காலத்தில் பலபல தொற்று நோய்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த கோவிட் தொற்றை இந்த உலகத்தை விட்டு இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றால் இந்த தடுப்பூசி அதற்குள்ள விதத்தில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

எமது நாட்டை பொறுத்தமட்டில் 12 வயது தொடக்கம் 15 வயதான மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஒரு டோஸ் ஏற்றப்படுகின்றது.16 வயதிலிருந்து 19 வயது மாணவர்களுக்கு 2 டோஸ் 3 மாதகால இடைவெளியில் ஏற்றப்படுகின்றது.

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3வது தடுப்பூசியான பூஸ்டர் ஊசி ஏற்ற அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நோய்வாய்ப்பட்டவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் , கர்ப்பிணி தாய்மார்கள், முக்கியமாக இந்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றிலிருந்து புதிய கட்டுப்பாடுகள் புதிய விதிமுறைகள் புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

அதில் அரசியல்வாதிகள் உயரதிகாரிகள் என உயர்வு தாழ்வு பார்க்காது சட்டம் அனைவருக்கும் சமம் என்ற விதத்தில்தான் சுகாதார நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலாவது அலையின் போது கோவிட் வைரசின் அல்பா திரிவு வைரஸ் தான் எங்களைத் தாக்கியிருந்தது. இரண்டாவது அலையின் போது பீற்றா காமா எனப்படுகின்ற வைரஸ் தாக்கியிருந்தது.மூன்றாவதாக அலையில் அதிகளவு உயிர்ச்சேதத்தையும் அதிகளவு தொற்றையும் ஏற்படுத்தியிருந்தது .டெல்டா மிகவும் ஒரு அபாயமான வைரசாகக் கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்பொழுது உலகத்தில் 99 வீதமான கோவிட் 19க்கு காரணமாக இந்த ஒமிக்குரோன் வைரஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே மட்டக்களப்பிலிருந்து மாதிரிகளை அனுப்பியுள்ளோம். இருந்தாலும் இங்கு காணப்படுகின்ற அனைவருமே ஒமிக்ரோன் பிறழ்வு வைரசால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கின்றோம்.அது விரைவில் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US