உடனடியாக முடிவுக்கு வரமுடியாத நிலையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ”ஒமிக்ரோன்”
ஒமிக்ரோன் என்ற புதிய கோவிட் மாறுபாடுபற்றி தற்போதே முடிவுகளுக்கு வருவது பொருத்தமானதாக இருக்காது என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்று தொடர்பாக நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள் மற்றும் கருத்துக்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் இந்தக்கருத்தை தாம் வெளியிடுவதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தொற்றுநோய் சூழ்நிலைகள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன புதிய மாறுபாடு வைரஸின் முந்தைய பதிப்புகளைக் காட்டிலும் அதிகமாக பரவக்கூடியது என்றும், அது குறிப்பிட்ட அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியைக் கடந்து செல்லக்கூடியது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்தக் கோட்பாடுகள் உண்மையென இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் புதிய மாறுபாடு குறித்து முழு உலகமும் மிகவும் கவலையடைந்துள்ளது
எனவே தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களும் அடிப்படை சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்று வைத்தியர் பத்மா குணரத்ன வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 நிமிடங்கள் முன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
