கற்குவாரி தூசு பெற்றவரை மிரட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி
வவுனியா, ஓமந்தைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது கல் அரியும் நிலையத்திற்கு கற்குவாரி தூசுகளை கொள்வனவு செய்து சேமித்து வைத்திருந்தவரை ஓமந்தை பொலிஸ் நிலைய அதிகாரி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் நபர் ஒருவர் கல் அரியும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
குறித்த கல் அரியும் நிலையத்தில் கற்களை அரிவதற்காக சீமெந்து, மணல், கற்குவாரி கல் தூசி என்பவற்றை அவர் கொள்வனவு செய்து தனது நிலையத்தில் சேமித்து வைத்திருந்துள்ளார்.
மிரட்டல்
அங்கு சிவில் உடையில் சென்ற ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த நிலையத்தில் காணப்பட்ட கற்குவாரி தூசு எப்படி வந்தது எனக் கேட்டு அதற்கான பற்றுச் சீட்டை கோரியுள்ளார்.
இதன்போது குறித்த கல் அரியும் நிலைய உரிமையாளர் தான் அதனை ராஜபக்ஸ என்ற கற்குவாரி உரிமையாளரிடம் பெற்றதாகவும், மணல், கல், குவாரி தூசு இறக்கும் போது எமக்கு பற்றுச் சீட்டு வழங்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இதன்போது ஓமந்தைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நான் ஓஐசி பற்றுச் சீட்டு காட்ட வேண்டும் என அவரை மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri