இலங்கை தொடர்பில் ஓமான் பிரஜை வெளியிட்ட அதிருப்தி!பின்னணியில் வெளியான காரணம்
குழு ஒன்றினால் தாக்குதலுக்குள்ளான, ஓமானியருக்கு சொந்தமான கட்டான-ஹல்பே கோபியாவத்தை பகுதியில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலைக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய முறையில் விசாரணைகள்
இருப்பினும் விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என தாக்குதலுக்கு உள்ளான ஓமான் பிரஜை, ஓமன் தூதுவர் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.
தனக்கு நீதி கிடைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று பேர் கைது
கடந்த மார்ச் 30ஆம் திகதி ஆடைத் தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பாதுகாவலரை சில குழுவினர் தாக்கி அதன் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,குறித்த இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
