ஓமானில் இருந்து பிரித்தானியர்களை வெளியேற்றுவதற்கு புறப்படவிருந்த விமானம் தாமதம்
ஓமானில் இருந்து பிரித்தானிய மக்களை அழைத்து வருவதற்காக பிரித்தானிய அரசாங்கத்தால் வாடகைக்கு விடப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானம், மத்திய கிழக்கில் போர் பதற்றத்தில் சிக்கியிருந்த பிரித்தானியர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை
பாதுகாப்பு வெளியேற்றம்
இந்நிலையில், அந்த விமானம், நேற்றைய தினம், திட்டமிட்டப்படி புறப்படவில்லை என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, அதற்கு பதிலாக பிரித்தானிய விமானம், இன்று புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானத்தில் பயணிக்கவிருந்தவர்களுக்கு பிரித்தானிய அரசாங்கத்தால் இரவு தங்குவதற்கு இலவச ஹோட்டல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri