புதிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேரர்
புதிய அமைச்சர்கள் எவரும் ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் யோசனை முன்வைத்தார்கள்.
அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, புதிய அமைச்சரவையை நாம் ஏற்கமாட்டோம்.
ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம். 20ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.
பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம் News Lankasri
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan