மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப மரணம்
மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் குரங்கிடமிருந்து வாழைத்தோட்டத்தைக் காப்பாற்றத் தொடுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(30.03.2024) இடம் பெற்றுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது எக்கிரிய பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் மேற்படி முதியவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வாழை மரத்தில் உள்ள வாழைக்குலையைக் குரங்கிடமிருந்து காப்பாற்ற வாழை மரம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியைக் கழற்ற முற்பட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீகாகியூல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
