யாழ்.பொலிகண்டி மேற்கு கடற்கரையில் முதியவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.11.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடிவேல் சிலன்ன வேல் எனும் 81 வயதுடைய முதியவர் இன்று மதியம் சுமார் 12.15 மணியளவில் பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
எனினும், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடி அப்பகுதி மக்கள் கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, மதியம் சுமார் 2.00 மணியளவில் குறித்த முதியவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதியவர் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.