புத்தளத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் (Puttalam) - புதிய எலுவாங்குளம், ஐலியகிராமம் பகுதியில் காட்டு யானைத் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்வபமானது, இன்று (17) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், புத்தளம் மாவட்டத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரி உயிரிழந்தவரின் சடலத்தைப் பார்வையிட்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு உயிரிழந்த நபர், முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனவும் தோட்டமொன்றில் காவலாளியாக கடமை புரிந்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 18 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
