கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபட்ட யாத்திரிகர் உயிரிழப்பு (Photos)
கதிர்காம பாதையாத்திரையை மேற்கொண்ட யாத்திரிகர் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு.தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றையதினம்(29.05.2023) பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கைதடி பகுதியை சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த (06.05.2023) திகதி கதிர்காமத்துக்கான பாதயாத்திரை யாழ்.சந்நிதி முருகன் ஆரலயத்தில் ஆரம்பித்த பாதையாத்திரை குழு பங்கேற்று நேற்று (28.05.2023) மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்துள்ளது.
திடீர் மரணம்
இந்த நிலையில் இன்று காலையில் குறித்த நபர் பணிஸ் உட்கொண்ட பின் திடீரென நிலத்தில் சரிந்து வீழுந்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
