மூன்று பிள்ளைகளின் தாய் கொடூரமாக கொலை - மர்மம் குறித்து பொலிஸார் குழப்பம்
புத்தளம், மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் வயோதிப தாய் ஒருவர் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டினுள் மர்மமான முறையில் கட்டப்பட்டு, ஆடைகளின்றி படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த செல்வமரிக்கார் அயினா உம்மா என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மர்மமான முறையில் கொலை
மூன்று பிள்ளைகளின் தாயான இவர், தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு காணியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், பிள்ளைகள் எப்போதாவது அவரைப் பார்க்க வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பெண் தனது வீட்டின் படுக்கையில் கைகளையும் கால்களையும் கட்டி ஏதோ ஒரு வழியில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் மேலும் உடலில் வெட்டுக்களோ அல்லது வேறு காயங்களோ காணப்படவில்லை என விசாரணை மேற்கொள்ளும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த பெண்ணிடம் அதிக அளவில் பணம் இருந்திருக்கலாம் எனவும் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் என்பன காணப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam