79 வயதான மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த நபர்
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
79 வயதான திலக மாலனி ஜெயரத்ன என்ற மூதாட்டி 18ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
ஒரு பிள்ளையின் தாயை பாலியல் சீண்டல் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காதை வெட்டி, இரண்டு தங்கக் காதணிகளும் திருடப்பட்டுள்ளன.
பிரதான சந்தேக நபர் கைது
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 67 வயதான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட விசாரணைக்கு பின்னர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் காதை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான கத்தியும், அந்த நேரத்தில் அவர் அணிந்திருந்ததாகக் கூறப்படும் ஆடைகளும், கிரிந்திவெலயில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan