யாழில் இருதயம் தெரியும் அளவிற்கு பன்றி தாக்கியதில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழப்பு
யாழில், இருதயம் தெரியும் அளவிற்கு பன்றி கடித்ததால் வயோதிபப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(23) இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய நாகமுத்து லட்சுமி (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்மணி நேற்று முன்தினம்(23) மாலை வீட்டுக்கு வெளியே வீதியில் நடந்து சென்றுள்ளார்.
மரண விசாரணை
இதன்போது, அங்கிருந்த வளர்ப்பு பன்றி ஒன்று இருதயம் வெளியே தெரியும் அளவிற்கு அவரை கொடூரமாக தாக்கியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த குறித்த வயோதிபப் பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(24) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.