க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் காலப்பகுதி அறிவிப்பு
கடந்த மே மாதம் 15ஆம் திகதி நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன.
உயர்தரப் பரீட்சை
பரீட்சையில் 452,979 விண்ணப்பதாரர்கள் தோற்றியதாகவும், அவர்களில் 3,87,648 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும், 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.