சர்வதேசத்தில் அதிகரிக்கும் பதற்றம்.. ட்ரம்பின் கடும் எச்சரிக்கை
ரஸ்யாவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக, இந்தியாவிற்கு எதிராக கணிசமாக வரிகளை உயர்த்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
ரஸ்யாவின் போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி தமது இணையத்தளமான ட்ரூத் சோசியலில் எழுதியுள்ளார்.
எண்ணெய் கொள்வனவு
ஏற்கனவே இந்தியாவின் மீது 25 வீத மேலதிக வரியை விதித்துள்ள நிலையில், புதிய வரி எவ்வளவாக இருக்கும் என்று ட்ரம்ப் குறிப்பிடவில்லை, எனினும் ட்ரம்பின் எச்சரிக்கையை நியாயமற்றது என்று புதுடில்லி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக மோதலின் ஆரம்பத்தில், ரஸ்யாவின் எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியாவை அமெரிக்காவே ஊக்குவித்ததாகக் கூறியுள்ளார்.
மோதல் வெடித்த பின்னர் பாரம்பரிய பொருட்கள் ஐரோப்பாவிற்கு திருப்பி விடப்பட்டதால் இந்தியா ரஸ்யாவிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



