இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாடிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதனை தொடர்ந்து குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் உறுதிப்படுத்தியிருந்தார்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சமூகவலைத்தளத்திலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் குற்றச்செயல்களை தெரியப்படுத்த தொலைப்பேசி எண்ணொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் News Insight தமிழ் நிகழ்ச்சி..