அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும்: டக்ளஸ் வேண்டுகோள் (Photos)

Jaffna Douglas Devananda Government Employee Sri Lanka Development
By Theepan Jun 15, 2023 11:59 AM GMT
Report

மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூக சிந்தனையோடு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக இன்று (15.06.2023) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராய்ந்த போதே  அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில், ''ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, விரிவாக ஆராய்ந்து தீர்வுகாணும் நோக்கில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் போக்குவரத்து, விவசாயம், கால்நடை, குடிநீர் விநியோகம், கடற்றொழில் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

ஆராயப்பட்ட விடயங்கள்

அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும்: டக்ளஸ் வேண்டுகோள் (Photos) | Officials Should Be Socially Minded Douglas Pleads

குறிப்பாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற காரைநகர் - ஊர்காவற்றுறை இடையிலான கடல் பாதை பழுதடைந்து இருப்பதனால், அதனை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் வரையில் தனியார் படகுகளை வாடகைக்கு அமர்த்தி பொது மக்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வீதி போக்குவரத்து ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, குறித்த சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு பிரதேச செயலாளரை அமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.

திடீர் சோதனை நடவடிக்கை

அதேபோன்று, பிரதேசத்தில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும்: டக்ளஸ் வேண்டுகோள் (Photos) | Officials Should Be Socially Minded Douglas Pleads

கால்நடைகள் திருடப்பட்டு இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கிலே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தீவகங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டணங்களை மீளாய்வு செய்தல், குடிநீர் விநியோகத்தினை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களும் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், ஏனைய விடயங்களை மிக விரைவில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டக் கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US