இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த 19 அதிகாரிகள் இலங்கை விஜயம்
இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த 19 அதிகாரிகள் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று (19.03.2023) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அதிகாரிகள் 46வது உயர் விமானக் கட்டளைப் பாடத்தின் கீழ் ஒரு வாரகால உத்தி சார்ந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளனர்.
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு
மூன்று சேவைகளில் இருந்தும் மூத்த கட்டளை மற்றும் பணியாளர் நியமனங்களுக்கான பயிற்சியின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் இந்த குழுவில் அடங்கியுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, இந்திய அதிகாரிகள் இலங்கை கடற்படை கட்டளை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை பார்வையிட்டு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு பங்காளித்துவத்தை மேலும்
வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த விஜயம் அமைவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
