அரசாங்கத்தின் தோல்விக்கு அதிகாரிகள் பலியாகி வருகின்றனர் : திஸ்ஸ அத்தநாயக்க
அரசாங்கம் தோல்வியடையும் போது செயலாளர்களை பதவி விலகுமாறு கூறுவதால், அந்த தோல்விகளில் இருந்து அரசாங்கம் மீள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
நிபுணத்துவம் மிக்கவர்கள் நாட்டை ஆட்சி செய்வதாக மக்களிடம் கூறினாலும் நிலைமை அதற்கு மாறாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் அரசாங்கத்தின் தோல்விக்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் பலியாகி வருகின்றனர். இவர்களின் தெரிவு தவறு என்றால், அவர்களை தெரிவு செய்தவரும் தவறானவர்.
தகுதியற்றவர்களை பதவிகளுக்கு நியமித்தால், பொருளாதார ரீதியாக பாரிய வீழ்ச்சிகள் ஏற்படும். நிர்வாகத்தில் வீழ்ச்சி ஏற்படும். முகாமைத்துவம் கட்டாகாலிகள் போல் காணப்படும்.
நிபுணர்கள் மூலம் நாடு நிர்வகிக்கப்படும் என மக்களுக்கு கூறினார்கள்.
எங்கே அவர்கள் செயற்திறன், எங்கே அவர்களின் முகாமைத்துவம். எங்கே அவர்களின் அபிவிருத்தி. எதுவுமே இல்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan