முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரபூர்வ இல்லங்கள் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த 2015ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் பிரவேசித்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் தங்களது அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 13 உறுப்பினர்கள் இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் தங்களது பொருட்களை அகற்றிக் கொண்டு இல்லங்களை அதிகாரபூர்வமாக ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் இதுவரையில் இல்லங்களை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மாதிவல பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இல்லங்களே இவ்வாறு ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




