தமிழர் பகுதியில் தொடரும் அடக்குமுறைகள் : துப்பாக்கியை காட்டி மக்களை மிரட்டிய அதிகாரிகள்
வவுனியா ஓமந்தை கொந்தக்காரண்குளம் பகுதியில் காணி ஒன்றில் அபிவிருத்தி பணிகளை செய்து கொண்டிருந்தவர்களை வனவளத்திணைக்கள அதிகாரிகள் கைது செய்தமையால் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் அபிவிருத்தி பணிகளை அந்த காணியை பராமரிப்பவர்களால் இன்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அந்த பகுதிக்கு சென்ற வனவளத்திணைக்கள அதிகாரிகள் இது வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காணி என தெரிவித்து அந்த பணிகளை தடுத்து நிறுத்தியதுடன் அதில் ஈடுபட்ட ஒருவரை தமது வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
இதன்போது, குறித்த காணியின் உரிமையாளர் என தெரிவிக்கப்படும் நபர் இவ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டவரை விடுவிக்குமாறும் கூறியிருந்தார். இதனால் அந்தப்பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
அண்மையில் முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து தமிழர் பகுதியில் மக்களை அடக்கி ஒடுக்க சிங்கள இனவாத அதிகாரம் பயன்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 6 மணி நேரம் முன்

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri
