முன்னாள் பெண் போராளியை தாக்கிய அதிகாரிகள்: வீடுகள் உடைத்தெறியப்பட்டன - செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவில் வனவள திணைக்கள அதிகாரிகள், முன்னாள் பெண் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கைவேலி பகுதியில் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுக் குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர்.
இந்நிலையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோது குறித்த பகுதியை விட்டு மக்கள் சென்ற பின்னர் குறித்த பகுதியில் இருந்த குடும்பங்கள் மீள்குடியேற்றம் வரவில்லை பலர் உயிரிழந்தும் வேறு சிலர் வேறு இடங்களில் குடியேறிவிட்டனர்.
இவ்வாறான நிலையில் குறித்த கிராம மக்கள் 2012ஆம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கி விட்டனர்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |