பிரதேச சபை உறுப்பினரை அவமதித்த உத்தியோகத்தர்: செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு முறைப்பாடு

Northern Province of Sri Lanka
By Erimalai May 07, 2026 07:30 PM GMT
Report

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் சபையின்  உறுப்பினர் ஒருவரை அவதூறான முறையில் சபையிலிருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட உறுப்பினர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் மற்றும் அவருக்குத் துணையாகச் செயற்பட்ட செயலாளர் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம்- நாவிதன்வெளி பிரதேச சபையின் அதிரடித் தீர்மானம்

பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம்- நாவிதன்வெளி பிரதேச சபையின் அதிரடித் தீர்மானம்

பெரும் சர்ச்சை

அண்மையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த வருமானப் பரிசோதகர், உறுப்பினர் ஒருவரை அடாவடித்தனமான முறையில் வெளியேறுமாறு கூறியுள்ளார்.

பிரதேச சபை உறுப்பினரை அவமதித்த உத்தியோகத்தர்: செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு முறைப்பாடு | Officer Who Insulted A Pradeshiya Sabha Member

இதன்போது, "உங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?" என உறுப்பினர் வினவியபோது, சபையின் செயலாளரே தமக்கு அனுமதி வழங்கியதாக அந்த உத்தியோகத்தர் பதிலளித்துள்ளார்.

மேலும், "செயலாளர் எதனைக் கூறினாலும் அதனை நிறைவேற்றுவதே எனது கடமை" என அந்த உத்தியோகத்தர் சபையில் வாதிட்டுள்ளார்.

தவிசாளர் மற்றும் செயலாளர் முன்னிலையிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதிலும், அவர்கள் மௌனம் காத்தமை உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகப்படியான புகை வெளியேற்றும் வாகனங்கள்.. விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

அதிகப்படியான புகை வெளியேற்றும் வாகனங்கள்.. விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

சட்ட விதிமுறைகள் மீறல்

சட்ட விதிமுறைகள் மீறல் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த உறுப்பினர்,

"பிரதேச சபை சட்ட விதிமுறைகளின்படி, ஒரு உத்தியோகத்தர் உறுப்பினர்களுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்ற ஒழுக்கநெறி உள்ளது.

சபை மண்டபத்திற்குள் நுழைவதற்கு அவருக்கு அனுமதி இருக்கின்றதா? அப்படி அனுமதி இருந்தாலும், உறுப்பினர்களை வெளியேறுமாறு பணிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா? சட்டங்களை நிலைநாட்ட வேண்டிய செயலாளரே இத்தகைய செயல்களுக்குத் துணையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

பிரதேச சபை உறுப்பினரை அவமதித்த உத்தியோகத்தர்: செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு முறைப்பாடு | Officer Who Insulted A Pradeshiya Sabha Member

" குறித்த அநீதிக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சனுக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் ஆளுநர், வடக்கு மாகாண சபை நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்படி, இந்த விவகாரத்தில் முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நான் தவறு செய்திருந்தாலும், எனக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்ட உத்தியோகத்தர் மற்றும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என பாதிக்கப்பட்ட உறுப்பினர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..! திமுக - அதிமுக ஆட்சி அமைக்க முயன்றால் தவெகவின் 107 எம்.எல்.ஏக்களும் பதவி விலகுவார்கள்

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..! திமுக - அதிமுக ஆட்சி அமைக்க முயன்றால் தவெகவின் 107 எம்.எல்.ஏக்களும் பதவி விலகுவார்கள்


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US