அமைச்சர் விமலுடன் மோதல்! அரச சேவையில் இருந்து ஓய்வுபெறும் அதிகாரி
அரச சேவையில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
தனது இந்த தீர்மானம் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்சவுடன் ஏற்படும் கடமை ரீதியான கருத்து மோதல்கள் காரணமாக தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ள பெல்பிட்ட, உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற தனக்கு இன்னும் நான்கு ஆண்டு காலம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனுஷ பெல்பிட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் , தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam