தொடருந்தில் பெண்ணை மிரட்டி தண்டப்பணம் வாங்கிய அதிகாரி: பெண் முறைப்பாடு
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் பயணச்சிட்டை பரிசோதகர், வயதான பெண் ஒருவரை மிரட்டி தண்டப்பணம் அறவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம், இன்று (02.02.2025) பகல் 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண், தொடருந்து டிக்கெட்டினை தொடருந்து நிலையத்திற்கு கொண்டு வராத நிலையில், பயணச்சிட்டை பரிசோதகரிடம் தொலைபேசியில் அவரின் பயணச்சீட்டினை (டிக்கெட்டினை) காண்பித்துள்ளார்.
போலி பயணச்சீட்டு
இதன் பின்னர், குறித்த அதிகாரியும், அந்த பெண்ணின் பயணச்சீட்டினை உறுதிபடுத்தி பயணிக்க அனுமதித்துள்ளார்.
இருப்பினும், அநுராதபுரத்திற்கு அருகில் வைத்து அந்த பெண்ணின் பயணச்சீட்டு போலியானது எனக் கூறி பெண்ணை மிரட்டி 6600 ரூபாய் பணத்தினை தண்டமாக பெற்றுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண், தனது பயணச்சீட்டு போலியானது இல்லை எனவும் தன்னை மிரட்டி குறித்த அதிகாரி பணம் பெற்றதாகவும் வவுனியா தொடருந்து திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri
