மது போதையில் வாகனம் செலுத்திய அதிகாரி: படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் பஜ்ரோ வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (09.10.2022) இரவு நடந்துள்ளது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மது போதையில் வாகனம் செலுத்திய அதிகாரி
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், தற்போதைய ஆளுநரின் தமிழ்மொழி பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியுமான ஜனார்த்தனனே பஜ்ரோ வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும் அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த அதிகாரியை வைத்திய அறிக்கைக்கு உட்படுத்திய போது குறித்த மாகாண சபை உறுப்பினர் மதுபோதையில் இருந்ததாக வைத்திய அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று (10.10.2022) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
