மட்டக்களப்பு சிறைச்சாலையின் உத்தியோகத்தர் ஒருவர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (1) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
குறித்த சிறைச்சாலையில் சம்பவதினமான நேற்று இரவு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரை சிறைக்காவலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டுள்ளதுடன் அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam