பெண் ஒருவர் கொலை! பல நாட்களுக்கு பின்னர் சிக்கிய கொலையாளி
பியகம, மல்வான பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கொஸ்கொட பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய நபரொருவரே நேற்று (01) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சில நாட்களுக்கு முன்னர், பியகம- மல்வான பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நவந்தகல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தங்கியிருந்த வாடகை வீடொன்றினுள் அவரது முறையற்ற காதலி என கூறப்படும் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட மற்றும் பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
