கொழும்பில் ஆரம்பமாகும் அலுவலக பேருந்து சேவை - இரு மடங்காக அறவிடப்படும் கட்டணம்
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அலுவலக கடமைக்காக “சிட்டி பஸ்” என்ற சொகுசு பேருந்து சேவை ஒன்று இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக மாக்கும்புர பிரதேசத்தில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்துகள் பயணிக்கவுள்ளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உட்பட பகுதிகளில் அலுவலக பணிக்காக பயணிக்கும் பயணிகளுக்காக இந்த சேவை அமுலாகிறது. ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு முறை வீதி ஊடாக பயணிக்கும் இந்த பேருந்துகளுக்காக சாதாரண கட்டணத்தை விடவும் இரு மடங்கு அதிகமாக கட்டணம் அறவிடப்படும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் மாக்கும்புர, போக்குவரத்து நிலையத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மாக்கும்புர பகுதியில் இருந்து புறக்கோட்டை வரையிலும் புறக்கோட்டையில் இருந்து மாக்கும்புர வரையிலும் 138 வீதியிலும் பத்தரமுல்லை ஊடாக வரையும் இன்று இந்த பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam