கமத்தொழில் அமைச்சில் கைவரிசை காட்டிய அலுவலக உதவியாளர்கள் கைது
கமத்தொழில் அமைச்சின் களஞ்சியசாலையில் இருந்து பெருந்தொகை போட்டோ கொப்பி கடதாசி பொதிகளை திருடிய குற்றச்சாட்டில் அமைச்சின் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கமத்தொழில் அமைச்சின் கொழும்பு - பத்தரமுல்லை, தலங்கம பிரதேசத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இந்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
போட்டோ கொப்பி கடதாசி பொதிகள் தொடர்பான கணக்கெடுப்பு
அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த போட்டோ கொப்பி கடதாசி பொதிகள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை அதிகாரிகள் திடீரென கடந்த வாரம் மேற்கொண்டிருந்தனர்.
சந்தேகத்தின் பேரில் இருவர் கைது
இதன் போது கடந்த மார்ச் மாத கணக்கெடுப்பின் பிரகாரம் குறித்து வைக்கப்பட்டிருந்த எண்ணிக்கையில் இருந்து நவம்பர் மாத கணக்கெடுப்பின் போது சுமார் 300 பொதி போட்டோ கொப்பி கடதாசிப் பொதிகள் குறைவாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கமத்தொழில் அமைச்சின் கணக்காளர் தலங்கம, பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் அமைச்சில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
