பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் 6,000 ரூபாய் உதவித்தொகை வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (01) முதல் இந்த உதவித்தொகையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் நிறைவு செய்யும் காலம்
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வாங்குவதற்கான வவுச்சர்கள் விநியோகம் மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை பொருட்களை வாங்குவதற்கான ரூ.6,000 உதவித்தொகையை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் அரசாங்கம் நிறைவு செய்யும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.