அத்துமீறி செயற்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி அதிகரித்துள்ள நிலையில் விரைவில் யாழ்ப்பாணம் இந்தியத் தூதரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசத் தலைவர் செல்லத்துரை நற்குணம் எச்சரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 06ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட கடற் பரப்புகளில் அத்துமீறி வருகை தரும் இந்தியா ரோலர் படகுகளினால் எமது கடற்றொழிலாளர்களின் சுமார் 60 இலட்சத்துக்கு அதிகமான வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டும் கடற்றொழிலாளர்களால் பல வருட காலமாக வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் கடற்தொழில் உபகரணங்களையும் இழந்துள்ள நிலையில் எவ்விதமான இழப்பீடுகளும் கிடைக்கப் பெறவில்லை.
யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிப் போராட்டம்
அண்மையில் அத்து மீறிய இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு யாழ்.மாவட்ட செயலகத்தை முடக்கிப் போராட்டம் நடத்தியதோடு இலங்கை ஜனாதிபதி கடற் தொழில் அமைச்சர் மற்றும் இந்தியா பிரதமருக்கு அனுப்புமாறு எமது கோரிக்கை மனுவை அரசாங்க அதிபரிடம் கையளித்தோம்.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் எவ்விதமான கரிசனையும் கொள்ளவில்லை.
ஆகவே இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு தொடர்ந்து இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை அதிகரிக்குமானால் யாழில் உள்ள இந்தியத் துனைத் தூதரகத்தை முடக்கிப் போராட்டம் நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
