டைட்டனிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட தொடர்ந்தும் விளம்பரப்படுத்தியுள்ள OceanGate
டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காண ஆட்களை ஏற்றிச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி 10 நாட்கள் கடந்துவிட்டன.
இந்த நிலையில், டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை காண்பதற்கு அடுத்த ஆழ்கடல் சுற்றுப் பயணத்திற்கான விளம்பரம் இன்னும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பயணங்களை மேற்கொள்ள தீர்மானம்
அட்லாண்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதுடன், அதில் பயணித்தவர்களின் உடல்களின் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இத்தகைய பின்னணியில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை இயக்கிய OceanGate நிறுவனம், டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்க்க மக்களை அழைத்துச் செல்லும் பயணங்கள் தொடர்பான விபரங்களை இன்னும் தனது இணையதளத்தில் விளம்பரப்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு ஜூன் 12 முதல் ஜூன் 20 வரையிலும் ஜூன் 21 முதல் ஜூன் 29 வரையிலும் இரண்டு பயணங்களை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணத்திற்கான செலவில் டைவிங், தனியார் தங்குமிடம், தேவையான அனைத்து பயிற்சிகள், பயண உபகரணங்கள் மற்றும் கப்பலில் இருக்கும் போது அனைத்து உணவுகளும் ஈடுசெய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, ஒரு சுற்றுலாப்பயணியின் செலவு 250,000 அமெரிக்க டொலர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
