கூட்டமைப்பின் திட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்திய மட்டக்களப்பு மாநகரசபை : கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு (VIDEO)
தமிழ் தேசிய கூட்டமைப்பை எந்த திட்டங்களையும் முன்னெடுக்கவிடாமல் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபையில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக இறந்த உடலங்களை எரிக்கும் மின்தகனசாலை மட்டக்களப்பில் அமைப்பதற்கான பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மின் தகனசாலை அமைக்கும் பணிகள் ஆரம்பம்
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இந்த மின்தகன சாலையினை அமைக்கும் பணிகள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மாநகரசபையின் ஆணையாளர் மதிவண்ணன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாகக் குறித்த மின் தகன சாலையினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையிலும் அவை காலதாமதமான நிலையில் மீண்டும் இன்று அதன் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நீண்ட கால தேவை
சுமார் மூன்று கோடி ரூபா செலவில் இந்த மின்தகனசாலை அமைக்கப்படுவதன் ஊடாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக நிலவிவந்த தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மின்தகன நிலையம் இல்லாத காரணத்தினால் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலங்கள் பொலநறுவை போன்ற இடங்களுக்கு எரியூட்ட அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan