இனவாதம், மதவாதம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்! சஜித் பிரேமதாச
இனவாதம் மற்றும் மதவாதம் என்பன நாட்டின் முன்னேற்றப் பாதையின் தடைக்கற்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு ஒரு குடும்ப ஆட்சியும், அவர்களின் தான்தோன்றித்தனமான முடிவுகளுமே முக்கிய காரணம்.
இனவாதம் பின்பற்றிய அரசாங்கம்
இந்த அரசாங்கம் பின்பற்றிய இனவாதம், மதவாதம் மற்றும் குலம் , மொழி ரீதியான பிரிவினைகள் , பாகுபாடுகள் இந்த நாட்டின் முன்னேற்றத்தின் தடைக்கற்களாக அமைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எனவே இந்த நிலையை மாற்றி நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்ல அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan