ஒரு இலட்சம் பேரின் கையெழுத்துகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை (Photos)

Gotabaya Rajapaksa Sri Lankan Peoples 21st Amendment
By Rusath Jun 14, 2022 09:06 AM GMT
Report

ஒரு இலட்சம் பேரின் கையெழுத்துகளுடன் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரும் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்று வருவதாக அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு கோரும் அந்த கோரிக்கை மகஜரில்,

இலங்கை மக்களின் சமூக அரசியல் பொருளாதார வாழ்வு முற்றாகச் செயலிழந்து ஒரு அவல நிலைக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய ஊழல் முற்றிலும் தவறான முகாமைத்துவம் மற்றும் எதேச்சதிகாரமான ஆட்சி முறைமை என்பனவே நாட்டை இந்தளவு வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளியுள்ளன.

ஒரு இலட்சம் பேரின் கையெழுத்துகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை (Photos) | Petition Submitted Signatures One Lakh People

சமூக மற்றும் அரசியல் நெருக்கடி

இது உயிர் உடைமை அழிவுகள் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத துன்பத்துக்கு வழிவகுத்துள்ளதோடு சமூக மற்றும் அரசியல் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவுடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து ஆட்சியை முன்கொண்டு செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஒரு போதும் கோரவில்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த சூழ்நிலையில் இலங்கை மக்களால் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வரும் விடயங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இதன் கீழ் கையொப்பமிடும் இலங்கை மக்களாகிய நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

ஒரு இலட்சம் பேரின் கையெழுத்துகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை (Photos) | Petition Submitted Signatures One Lakh People

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதன் மூலமே அரச முறைமையில் முறைசார் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஒரு இலட்சம் பேரின் கையெழுத்துகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை (Photos) | Petition Submitted Signatures One Lakh People

ஜனாதிபதி கோட்டாபய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமை வகிக்கும் தற்போதைய அரசாங்கம் நாடு தற்போது அனுபவிக்கும் வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்ற ஒரு தோல்வியடைந்த அரசாங்கம் என ஏற்றுக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அரசாங்கத்தைப் பதவியில் நீடிக்கும் எந்தவித ஆதரவையும் வழங்கக் கூடாது.

இந்தக் கோரிக்கையை முன்கொண்டு செல்லும் வகையில் முன்னெடுத்துள்ள மக்கள் தலைமையிலான எந்தவொரு போராட்டத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரிவு படுத்த முயற்சி மேற்கொள்ளக் கூடாது.

ஒரு இலட்சம் பேரின் கையெழுத்துகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை (Photos) | Petition Submitted Signatures One Lakh People

தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துக்கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். அத்தோடு அடுத்த தேர்தலுக்கான காலவரையறையை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் வகையில் காணப்படும் பிரதம மந்திரியின் தலைமையில் அமைச்சரவைக்கு ஆட்சி அதிகாரம் வழங்கும் 21வது சீர் திருத்தச் சட்டம் தேவையான எந்தவொரு திருத்தத்துடனும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்பொழுது அத்திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு நாடாளுமன்ற அனைத்து ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒரு இலட்சம் பேரின் கையெழுத்துகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை (Photos) | Petition Submitted Signatures One Lakh People

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US