பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!
இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் முகஞ்சுழிக்கத்தக்க வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிகழ்நிலையில் பரவி வரும் ஒரு ஸ்கிரீன்ஷொட்டில், அமைச்சக செயலாளர் தொடர்பான அமைச்சக தகவல்களைக் காண்பிக்கும் ஒரு பிரிவின் கீழ் தகாத வார்த்தைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியது.
உடனடி திருத்தம்
இதுபோன்ற வார்த்தைப் பிரயோகம் இருப்பதால், வலைத்தளம் வெளிப்புறத் தரப்புகளால் ஊடுருவப்பட்டு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விடயத்தில் அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை, ஆனால் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் விசாரணை மற்றும் உடனடி திருத்தத்தின் அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளனர்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
