டொனால்ட் ட்ரம்பை பிரசார மேடையில் விமர்சித்த ஒபாமா
சர்வதேசத்தின் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்வைத்த விமர்சனங்கள் பேசுபொருளாகியுள்ளன.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸிற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்விலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது டொனால்ட் ட்ரம்பிற்கு பணத்தின் மீது தான் அக்கறை என பராக் ஒபாமா கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும், நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹரிஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு எதிராக களம் இறங்கி உள்ள டொனால்ட் டிரம்ப், தனது பிரசார யுக்திகளை மாற்றி கொண்டே வருவதாக கூறப்படுகிறது.
எனினும் இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் கமலா ஹரிஸ் தான் வெற்றி பெறுவார் என கூறப்பட்டு வருகிறது.
பங்கருக்குள்ளேயே வெடிக்கப்போகும் ஈரானின் அணுகுண்டுகள்!! ஈரான் ஊடகவியலாளர் கூறுகின்ற அச்சம்தரும் தகவல்கள்
தாக்கி பேசிய ஒபாமா
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப்பை, ஒபாமா தாக்கி பேசி பிரச்சாரம் செய்துள்ளார்.
இதன்போது அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோர் நாட்டு மக்களுக்கு செய்த நல பணிகள் குறித்து விவரித்துள்ளார்..
கமலா ஹரிஸ் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர் எனவும், அவருக்கு நாட்டு மக்களின் நிலை நன்கு தெரியும் என்றும் ஒபாமா எடுத்துரைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |