ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்.மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்.மாவட்ட பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
குறித்த நிகழ்வானது இன்று (9) கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.
சத்தியப்பிரமாணம்
இந்த சத்திய பிரமாணத்தில் பிரதேச சபை மற்றும் நகர சபை மற்றும் உறுப்பினர்கள் தமது சத்தியப்பிரமாண உரையாக ''கொடிய யுத்தத்தில் உயர் நீத்த பொதுமக்கள் சாட்சியாக இவ் மண்ணின் விடுதலைக்காக உயிர் நீத்த அணைத்து போராளிகள் சாட்சியாக இவ் மண்ணிக்காக உயிர் நீத்த அரசியல் தலைவர்கள் சாட்சியாக என தொடங்கி இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் நாம் கொண்ட கொள்கைக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பங்கம் விளைவிக்காத வகையில் மாநகர சபை நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களாகிய எமது செயற்பாட்டை வழங்குவோம் என உறுதி கூறினர்.
குறிப்பாக இந்த முறை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ் மாவட்டத்தில் 46 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தாத்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
