இ.தொ.காவின் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பதவிப் பிரமானம்
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பிரதேச சபை, அக்கரபத்தனை பிரதேசசபை, கொட்டகலை பிரதேசசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இன்று (23) பதவிப் பிரமானம் செய்து கொண்டுள்ளனர்.
கடமைகள் பொறுப்பேற்பு
இதன் அடிப்படையில் இன்று (23) நுவரெலியா மாநகரசபையின் பிரதி மேயராக இ.தொ.காவின் சிவன்ஜோதி யோகராஜ், நுவரெலியா பிரதேச சபை தவிசாளராக வேலு யோகராஜ், அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளராக ரதிதேவி, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளராக ராஜமனி பிரசாத் ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக இன்று தமது கடைமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், முன்னிலையில் பதவி ஏற்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டு, உள்ளூராட்சி மன்றம் செயலாளர்களிடம் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தவிசாளர் ராஜதுரை, உள்ளூராட்சி மன்றம் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் இ.தொ.காவின் முக்கியஸ்தர் என பலர் கலந்து கொண்டனர்.





அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan