கிளிநொச்சி மாவட்ட நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்
கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியின் பழைய மாணவனும் முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் அபிவிருத்தி சங்க செயலாளருமான நவரத்தினம் சயந்தன் இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
கிளிநொச்சி முரசுமோட்டை சேர்ந்த நவரத்தினம் சயந்தன் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியின் பழைய மாணவன் என்பதுடன் ஊரியான் கிராம அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் ஆலய நிர்வாக சபை உள்ளிட்ட அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றார்.
சமூக செயற்பாட்டாளர்
அத்துடன் வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவி திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கல்விக்கான உதவித்திட்டங்கள் என்பவற்றை வழங்கி வருகின்ற ஒரு சமூக செயற்பாட்டாளர் ஆவார்.
இந்நிலையில், இவர் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் காயத்திரி
முன்னிலையில் தீவு முழுவதுமான சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்
செய்துள்ளார்.