க.பொ.த சாதாரண தரப் பரீட்சை : நீடிக்கப்பட்டுள்ள கால அவகாசம்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான 2024 (2025) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், டிசம்பர் 10ஆம் திகதி வரை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் சமூகங்களை பாதித்துள்ள அண்மைய சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
கால அவகாசம்
இதேவேளை, 2024 (2025)இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நவம்பர் (05) முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic மூலம் இணையவழியூடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தங்களின் பரீட்சை விண்ணப்பங்களை பாடசாலை அதிபர்கள் ஊடாக சமர்ப்பிக்க வேண்டும்.
அதேவேளை, தனியார் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |