மாணவர்களின் கவனத்திற்கு! பரீட்சை நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சையில் முறைகேடுகளைக் குறைப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
விசேட வேலைத்திட்டம்
எனவே பரீட்சை சட்டதிட்டங்களுக்கமைய செயற்படுவதில் அவதானமாக இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வருடம் நடைபெறவுள்ள பரீட்சையில் 474,147 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடு முழுவதும் 3,663 பரீட்சை நிலையங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும்.
மேலும் பரீட்சை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.