வேலன் சுவாமிகளுக்கு அழைப்பாணை (Photos)
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகளளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அழைப்பாணை, இன்று (08.02.2023) நண்பகல் சிவகுரு ஆதீனத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் வன்முறையை தூண்டியமை அதிகளவு ஆட்களை கூட்டியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தவத்திரு வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
இந்த நிலையில் இவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தவத்திரு வேலன் சுவாமிகள கூறியதாவது, சிவில் உடையில் வந்த பொலிஸாரே இந்த அழைப்பாணையை வழங்கினர் எனவும் வழக்கு விசாரணைகளுக்கு 20/02/2023 அன்று அழைக்கப்பட்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan
