நுவரெலியா மாவட்டத்தில் 26 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் 26 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி துசாரி தென்னக்கோன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட 26 வேட்பு மனுக்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிராகரிப்பு
மொத்தமாக 110 வேட்பு மனுக்கள் கிடைக்கப் பெற்றதாகவும் இதில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக் குழுக்கள் என்பனவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் கொத்மலே மற்றும் மஸ்கெலிய உள்ளுராட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்-க.கிஷாந்தன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரத்திற்கு கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும்! விஜயகலா மகேஸ்வரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த பயிற்சி வகுப்புகளும் இல்லாமல் தினமும் 12 மணி நேரம் படித்து UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் News Lankasri

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan
