நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு
நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்த தீர்த்த ஊர்வலம் வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் காலை முதல் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறன.
நாளையதினம் மஹாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறவுள்ள நிலையிலே இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம் (17) வெள்ளிக்கிழமை மயூரபதி ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து முதலாவது நாள் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகி கொள்ளுப்பிட்டி இந்திய தூதரகம், காலிமுகத்திடல் ஊடாக பிரதான வீதி, செட்டியார் தெரு, ஆமர் வீதி, அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவல, அவிசாவளை, யட்டியாந்தோட்டை, கினிகத்தேனை, ஹட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, பூண்டுலோயா, தவலந்தனை சந்தி ஊடாக இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தைச் சென்றடைந்தது.
இரண்டாவது ஊர்வலம் இன்று சனிக்கிழமை (18) இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தில் காலை 7 மணிக்கு இடம்பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகி, லபுக்கலை, நுவரேலியா ஊடாக, நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.
குறிப்பாக நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்காக இந்தியாவின் உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் சரயு ஆற்றில் இருந்து புனிதநீர் 25 லீற்றர் கொண்டு வரப்பட்டுள்ளது.
இராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகரம் சரயு ஆற்றுக் கரையில் அமைந்துள்ளமை சிறப்பம்சம் ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam
